காய்கறி அவியல்

என்னென்ன தேவை?

துண்டுகளாக நறுக்கிய முருங்கைக்காய், வாழைக்காய், சேனைக்கிழங்கு, கேரட், பூசணிக்காய், அவரைக்காய், உருளைக்கிழங்கு, மாங்காய், கொத்தவரங்காய்  அனைத்தும் சேர்த்து - 1/2 கிலோ,

பச்சைமிளகாய் - 4-6,

உப்பு - தேவைக்கு,

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,

கெட்டித் தயிர் - 1 பெரிய கப்,

தேங்காய்த்துருவல் - 1/2 முடி,

சீரகம் - 1 டீஸ்பூன்,

தாளிக்க கடுகு, கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். காய்கறிகளில் உப்பு, தண்ணீர் ஊற்றி சிறு தீயில் வைத்து வேக விடவும்.  நன்றாக வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து கிளறி கொதிக்க விடாமல் இறக்கவும். பிறகு அதன் மீது தேங்காய் எண்ணெய், அடித்த தயிரை ஊற்றி கலந்து  கொள்ளவும். கடாயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அவியலில் ஊற்றி கலந்து பரிமாறவும்.

Related Stories: