×

சாக்லேட் பர்ஃபி

என்னென்ன தேவை?

பால் பவுடர் - 1/2 கப்,
கோகோ பவுடர் அல்லது சாக்லேட் பவுடர் - 2 டீஸ்பூன்,
சர்க்கரை - 50 கிராம்,
நெய் - 3 டேபிள்ஸ்பூன்,
இனிப்பு கோவா - 1/2 கப்,
தண்ணீர், நறுக்கிய பாதாம், பிஸ்தா - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் பால் பவுடர், கோகோ பவுடர் இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கம்பி பாகு  பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு பால் பவுடர், கோகோ கலவையை கொட்டி கிளறி, நடுநடுவே நெய் சேர்த்து கிளறி இறக்கவும். நான்ஸ்டிக் தவாவில்  சிறிது நெய்யை ஊற்றி மிதமான தீயில் வைத்து கோவாவை சேர்த்து கிளறி, அதனுடன் பால் பவுடர், கோகோ கலவையை சேர்த்து கிளறவும். நடு நடுவே சூடான  நெய் சேர்த்து தவாவில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும் இறக்கி, நெய் தடவிய தட்டில் ஊற்றி, நட்ஸ் தூவி லேசாக அழுத்தி ஆறியதும் துண்டுகள் போட்டு  பரிமாறவும்.

Tags :
× RELATED ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்