தோகைமலை ஆலத்தூர் பெருமாள், கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்

தோகைமலை: தோகைமலை அருகே ஆலத்தூர் பெருமாள், கருப்பசாமி கோயில் கும்பாபிசேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆலத்தூர் ஊராட்சி ஆலத்தூரில் திருச்சி ரோட்டில் உள்ள பெரியகுளம் கரையில் வேண்டுவோர்களுக்கு வேண்டும் வரம் அளித்து வரும் பெருமாள், கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய கிராம பொதுமக்கள் முடிவு செய்தனர். அதைதொடர்ந்து கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய காவிரியில் இருந்து பால் குடம், தீர்த்த குடங்கள் எடுத்து வரப்பட்டு கோயிலில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

Advertising
Advertising

முதல்கால பூஜையில் கணபதி ஹோமம், மஹாலெட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதணை, விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாஜணை, வாஸ்த்து சாந்தி, கும்பலங்காரம், யாகசாலை பிரவேசமண்டபா அர்ச்சணை உள்பட பல்வேறு பூஜைகள் செய்து தீபாராதணை நடைபெற்றது.  2ம் கால பூஜையில் விக்னேஷ்வரர் பூஜை, நாடிசந்தானம், கோ பூஜை, கடம்பறப்பாடுகள் நடைபெற்று பெருமாள், கருப்பசாமி ஆகிய காமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோவிந்தா, கோவிந்தா என்று பக்தர்கள் முலக்கமிட்டு வழிபட்டனர். பின்னர் மூலவர் கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம், தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரதாசம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் குளித்தலை தொகுதி திமுக எம்எல்ஏ ராமர், முன்னால் எம்எல்ஏ பாப்பாசுந்தரம், முன்னால் சேர்மன்கள் சந்திரசேகர், பிச்சை, அதிமுக ஒன்றிய செயலாளர் விஜயன், ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய செயலாளர் ஓம்சக்திரவிசந்திரன், துணை சேர்மன் தியாகராஜன், ஊர்நாயக்கர் கிருஷ்ணன், ஊர்கவுண்டர் சரவணன், ஆலத்தூர் முன்னாள் தலைவர்கள் ஜெயபால், கேசவன், ரஜினி மக்கள் மன்ற செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ், பார்த்திபன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.   

Related Stories: