அம்பை: அம்பாசமுத்திரம் வரசித்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் விழா நடந்தது. அம்பை மேலப்பாளையம் கீழ ரதவீதி லட்சுமி நர்ஸிங் ஹோம் வளாகத்தில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் தன்வந்திரி மகாவிஷ்ணு கோயில் உள்ளது. இக் கோயிலின் வருஷாபிஷேகம் விழா நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு காலை 8 மணிக்கு அனுக்ஞை, 9.30 மணிக்கு ஜெபம், கும்ப பூஜை, 10.00 மணிக்கு மஹா கணபதி ஹோமம், தன்வந்திரி உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது. பின் வரசித்தி விநாயகர், நாகராஜருக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. 11.00 மணிக்கு விமான கலசத்திற்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. 11. 30 மணிக்கு நடந்த தீபாராதனையையடுத்து பிரசாதம் வழங்கப்பட்டது.