சபரிமலை ஐயப்பன் கோயிலில் தேவ பிரசன்ன பரிகார பூஜைகள் துவக்கம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று முதல் தேவபிரசன்ன பரிகார பூஜைகள் தொடங்கியது. புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. நேற்று முதல் புரட்டாசி மாத பூஜைகள் தெடங்கியது. மழை வெள்ளத்தால் பம்பையில் சேதம் ஏற்பட்டிருந்ததால் ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே கிடந்த சில மாதங்களுக்கு முன் பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி நடந்த ஆறாட்டு ஊர்வலத்தின் போது யானை மிரண்டு ஓடியது. இதில் யானை மீது இருந்த பூஜாரி கீழே விழுந்து காயமடைந்தார். ஐயப்ப விக்ரகமும் கீழே விழுந்து சேதமடைந்தது. இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன் தேவசபிரசன்னம் நடத்தப்பட்டது.  

அப்போது சபரிமலை மற்றும் பம்பையில் பரிகார பூஜைகள் நடத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி சபரிமலையில் நேற்று பரிகார பூஜைகள் தந்திரி கண்டரர் ராஜீவரர் தலைமையில் நேற்று அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுதர்சன ஹோமம் நடந்தது. இன்று (18ம் தேதி) சுமங்கலி பூஜை, கணபதி ஹோமம், சாயூஜ்ய பூஜை போன்ற பூஜைகள் நடக்கிறது. நாளை மிருத்யுஞ்சய ஹோமம் நடக்கிறது. 20ம் தேதி சுகிர்த ஹோமம் மற்றும் மாளிகைபுறத்தில் கலசாபிஷேகம் நடக்கிறது. 21ம் தேதியுடன் புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடைகிறது. நேற்று சபரிமலையில் பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

Related Stories: