விநாயகர் சதுர்த்தி

சாப விமோசனத்தால் கிடைத்த நன்மை அவுரவ முனிவரின் மகள் சமி என்பவள் சமி என்பவளின் கணவன் மந்தாரன். ஒரு முறை புருசுண்டி முனிவரை கண்ட சமியும். அவளது கணவரும், முனிவரைப் பற்றி ஏளனமாகப் பேசி சிரித்தனர். கோபமுற்ற புருசுண்டி முனிவர், கணவன் மனைவி இருவருக்கும் சாபமிட்டார். அதன்படி மந்தாரமாகவும், வன்னி மரமாகவும் இருவரும் மாறிவிட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து விநாயகரை வேண்டினர். இருவருக்கும் சாப விமோசனம் கிடைத்தது. விநாயகப் பெருமானின் வழிபாட்டுக்குரிய வன்னிய மர இலையாகவும், மந்தார மலராகவும் மாறினார்கள்.

கணபதியை  அர்ச்சிக்கும் இலை

அரச இலை      கல்வியில் தேர்ச்சி பெறலாம்

ஜாதி மல்லி இலை      ஞானம் பெருகும்

வெள்ளை அறுகம்புல்      சவுபாக்கிய வாழ்வு கிட்டும்.

மருவு இலை      துர்சக்திகள் அகலும்

வில்வ இலை      இன்ப வாழ்வு அமையும்

தாழை இலை      பில்லி சூன்யம் விலகும்.

முல்லை இலை      தர்மசிந்தனை வளரும்

நாவல் இலை      பதவி உயர்வு பெறலாம்

Related Stories: