விநாயகர் பிட்ஸ்

ஆயுள் விருத்தி தரும் விநாயகர்

மதுரைக்கு அருகில் உள்ள மடப்புறத்தின் திருபுவனத்தில் தேங்காய் பிள்ளையார் என்னும் விசாலாட்சி, விநாயகர் என்ற பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இவருக்கு ஏழு தேங்காய்களை மாலையாக்கி அணிவித்து, எலுமிச்சம் பழங்களை வைத்து 108 முறை வலம் வந்தால் ஆயுள் விருத்தி ஏற்படும்.

பச்சைநிற மேனி விநாயகர்

சரித்திர புகழ்வாய்ந்த கங்கைகொண்ட சோழபுரம் திருத்தலத்தில் உள்ள பிரகதீசுவரர் கோயிலுக்கு அருகில் இருந்து அருள்பாலிக்கிறார் கணக்குப் பிள்ளையார். இந்த பிள்ளையாருக்கு பால் மற்றும் எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்யும் போது பச்சைநிற மேனியராகக் காட்சி தருகிறார். இவரை ‘‘கனக விநாயகர்’’ என்று பெயரிட்டு மக்கள் அழைக்கின்றனர்.

நர்த்தன கணபதி

வட இந்தியர், திபெத், நேபாளம் போன்ற இடங்களில் எல்லாம் ஓவியங்களில் நர்த்தன கணபதி பிரதானமான இடத்தை பிடித்திருக்கிறார். மஞ்சள் நிறத்துடன் கூடிய விநாயகரை ஒரு காலை தாமரை இதழ் தாங்கியிருக்க மறுகால் தூக்கிய திருவடியாக சதுர் புஜங்களில் ஒன்றுயோக அஸ்தமாக தாண்டவமாடும் கணபதியே நர்த்தன கணபதி என்று அழைக்கப்படுகிறார். வாதாபி திருபுவனேஸ்வரம், திருக்கச்சூர், மதுைர மீனாட்சியம்மன் கோயில் ஆகிய தலங்களில் நர்த்தன கணபதியை காணலாம்.

Related Stories: