நெய் அப்பம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 ஆழாக்கு

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

வெல்லம் - 1 ஆழாக்கு  (இனிப்பு குறைவாக இருந்தால் போதும் என்றால் வெல்லத்தின் அளவை சிறிது குறைத்துக்கொள்ளலாம்)

ஏலக்காய் - 3

பூவன் பழம் - 1

துருவிய தேங்காய் - 1 மூடி

முந்திரி - 50 கிராம்

நெய் - தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசி, உளுந்து இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். மசிந்ததும் வெல்லம், ஏலக்காய், துருவிய தேங்காய், பூவன் பழம் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு மீண்டும் அரைக்கவும். பின் முந்திரியை பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும்.  பணியாரக்குழியை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது நெய் விட்டு மாவை சிறிது சிறிதாக ஊற்றி சுட்டு எடுக்கவும் பணியாரக்குழி இல்லாவிட்டால் கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் சிறிய கரண்டியால் சிறிது சிறிதாக மாவை ஊற்றி சுட்டு எடுக்கவும்.

Related Stories: