நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில் திருவிழா

நாகர்கோவில்: நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில் கொடை விழா கடந்த 2ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை தினமும் மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 7ம் தேதி இரவு 8 மணிக்கு பாயாச குளிப்பு வழிபாடு நடந்தது. 8ம் தேதி சமய வகுப்பு மாணவ, மாணவி களின் கலை போட்டிகள் நடந்தது. கடந்த 9ம் தேதி காலை 9 மணிக்கு அம்மன் நகர்வலம் புறப்படுதல், இரவு 9 மணிக்கு சாஸ்தாவுக்கு அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது.

Advertising
Advertising

நேற்று காலை 9 மணிக்கு பார்வதிபுரம் கிராமத்திலிருந்து யானை மீது கும்பம் தரித்து நகர்வலம் வருதல், 12 மணிக்கு அபிஷேகம், 1 மணிக்கு தீபாராதனை, 1.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடந்தது. நள்ளிரவு 12.15 மணிக்கு சுடலைமாட சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு ஊட்டு படைப்பு ஆகியவை நடந்நது. இன்று (12ம் தேதி) பகல் 12.30 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து பூப்படைப்பு, மஞ்சள் நீராடுதல் ஆகியவை நடக்கிறது.  2 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Related Stories: