திருச்செந்தூர் ஆவணி திருவிழாவில் மலர் கேடய சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் ஆவணித்திருவிழாவில் 12ம் நாளையொட்டி மலர் கேடய சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி  திருக்கோயில் ஆவணித் திருவிழா கடந்த 30ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா  நடந்தது.

12ம் திருவிழாவான நேற்று முன்தினம் மாலை 4 மணி க்கு மஞ்சள் நீராட்டு  திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் வலம் வந்து வடக்கு ரதவீதியில் உள்ள  மண்டபம் சேர்ந்தது. அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம்  தீபாராதனை யை தொடர்ந்து இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மலர் கேடயச் சப்பரத்தில் திருவீதி பவனி வந்து திருக்கோயில் சேர்ந்தது. ஏற்பாடுகளை கோயில்  நிர்வாகஸ்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: