உப்பூர் விநாயகருக்கு திருக்கல்யாணம்

ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூரில் உள்ள வெயிலுகந்த விநாயகர் கோயிலில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் கிராமத்தில் உள்ள வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8வது நாளான நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலை 5.10 மணிக்கு விநாயக பெருமானுக்கு சித்தி, புத்தி என்ற இரு தேவியருடன் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

இதைத்தொடர்ந்து விநாயகர் இரு தேவியருடன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தமிழகத்திலேயே விநாயகருக்கு இரு தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெறும் ஒரே கோயில் இதுதான். விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: