ஆவணி மாத அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அடுத்த வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் காலை கோபால வினாயகர், பெரியாழி, அங்காளம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. பின்னர், மதியம் வெள்ளக்குளத்தில் இருந்து கங்கையம்மன், எட்டியம்மன், அங்காளம்மன் பூங்கரகம் அலங்கரிக்கப்பட்டு வீதிஉலா நடத்தப்பட்டது. கோயில் வளாகத்தில் அம்மனுக்கு கூழ்வார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, அம்மனுக்கு கும்பம் படையலிட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாலை அங்காளம்மன்  மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் உலாவும், இரவு ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு சேவையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும், முடிகாணிக்கை செலுத்தியும், ஆடு, கோழி பலியிட்டும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு வாணவேடிக்கை, இன்னிசை நிகழ்ச்சி, அன்னதானம் ஆகியன நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: