அரிசி ரவை கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

Advertising
Advertising

ரவையாக உடைத்த அரிசி மாவு  - 1 கப்,

மிளகு -  10,

கரகரப்பாக பொடித்த காய்ந்தமிளகாய் -  2,

தேங்காய்த்துருவல் - 1 கப்,

தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு.

தாளிக்க:

கடுகு -  1/2 டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு  - 1 டீஸ்பூன்,

பெருங்காயத்தூள்  - சிறிது,

கறிவேப்பிலை - சிறிது,

கடலைப்பருப்பு  - 2 டீஸ்பூன்,

காய்ந்தமிளகாய் -  2.

எப்படிச் செய்வது?

கடாயில் தேங்காய் எண்ணெயை காயவைத்து, கடுகு, காய்ந்தமிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, பெருங்காயத்தூள், மிளகு, கறிவேப்பிலை  போட்டு 6 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைத்து உப்பு, தேங்காய்த்துருவல், காய்ந்தமிளகாய்ப் பொடி, அரிசி ரவையை தூவி நன்றாக கிளறி வெந்ததும் இறக்கி  சிறிது ஆறவிட்டு சிறுசிறு உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

Related Stories: