கோவா கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

பதப்படுத்திய அரிசி மாவு  - 2 கப்,

பால் -  1 லிட்டர்,

சர்க்கரை - 1/2 கப்,

ஏலக்காய்த்தூள் - சிறிது.

எப்படிச் செய்வது?

பூரணத்திற்கு பாலை சுண்டக் காய்ச்சி சர்க்கரை, ஏலக்காய்த்தூள் போட்டு நன்றாக கிளறி, கெட்டியான கோவா பதத்திற்கு வந்ததும் இறக்கி, சிறிது ஆறியதும் சிறு  சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அரிசி மாவைத் தூவி கிளறி இறக்கவும். சிறு உருண்டை அளவு மாவு  எடுத்து சொப்பு போல் செய்து உள்ளே கோவா பூரணத்தை வைத்து மூடி கொழுக்கட்டையாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்பு:

விரும்பினால் கோவாவுடன் உடைத்த நட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ் சேர்க்கலாம்.

Related Stories: