ஆம்பூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆடிப்பூர கரக விழா

ஆம்பூர்: ஆம்பூரில் நேற்று ஆதிபராசக்தி கோயிலில் ஆடிப்பூர விழாவையொட்டி கரக ஊர்வலம் நடந்தது. ஆம்பூர் ஜவஹர்லால் நேரு நகர் ஆதிபராசக்தி கோயிலில் நேற்று ஆடிப்பூர விழா நடந்தது. இந்த விழாவையொட்டி கரக ஊர்வலம் பைபாஸ் சாலை விஜய விநாயகர் கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தீச்சட்டி மற்றும் கஞ்சி கலயங்களை ஏந்தி சென்று அம்மனை வழிபட்டனர். இந்த விழாவில் ஐயப்ப சேவா சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர், இந்து மக்கள் கட்சியின் மாநில நிர்வாகி ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: