திருச்செந்தூர் ஆவணித்திருவிழாவில் சுவாமிஅம்மன் புஷ்ப சப்பரங்களில் வீதியுலா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் ஆவணித்திருவிழாவை முன்னிட்டு நேற்று சுவாமி,அம்மன் புஷ்ப சப்பரங்களில் வீதிவலம் வந்தனர்.அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா கடந்த 30ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 8ம்தேதி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

11ம் திருவிழாவான நேற்று மாலையில் சிவன் கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் எழுந்தருளி சன்னதி தெரு யாதவர் மண்டகப்படிக்கு சென்றடைந்தது. அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைதொடர்ந்து சுவாமி அம்மன் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வீதிகளில் உலாவந்து மேலக்கோயில் சேர்ந்தது.

Related Stories: