அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்காக பண்ணாரியில் பக்தர்கள் குவிந்தனர்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்து பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. நேற்று அமாவாசை தினம் என்பதால், காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். அமாவாசையை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பஜனை பாடல் குழுவினர், பக்திப் பாடல்களை பாடினர். இந்த பாடல்களுக்கு ஏற்றவாறு ஆண்களும், பெண்கள் குழுவினரும் நடனமாடினர்.  சத்தியமங்கலத்திலிருந்து கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: