சிப்பிகுளம் வியாகுல ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவில் தேர் பவனி

குளத்தூர்: குளத்தூர் அருகே சிப்பிகுளம் தூய வியாகுல ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவில் தேர்பவனி நடந்தது. குளத்தூர் அருகே உள்ள சிப்பிகுளம் தூய வியாகுல ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த மாதம் 31ம்தேதி மாலை 6மணிக்கு பங்குதந்தைகள் ஜாண்செல்வம், சகாயம், அலாய்சியுஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து இந்த திருவிழாவானது  பத்து நாட்கள் மிகவும் விமர்சையாக நடந்தது. விழா நாட்களில் தினமும் மாலையில் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர்வாதம், மறையுரை, புதுநன்மை திருப்பலி நிகழ்ச்சிகளில் பங்குதந்தைகள் அருமைநாதன், சந்தீஷ்டன், சதீஷ், கிராசியுஸ், ஆல்வின், பிரதீபன்லியோன்ஸ், லிப்டன், கோயில்மணி, ராயப்பன், செட்ரீக்பீரீஸ், அமலன் ஆகியோர் திருவிழா நாட்களில் சிறப்பித்தனர்.

Advertising
Advertising

திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று சிப்பிகுளம் மற்றும் கீழவைப்பார் முக்கிய வீதிகளில் தூய வியாகுல ஆரோக்கிய அன்னை சொரூபத்துடன் தேர் பவனி நடந்தது. தொடர்ந்து மதியம் 12மணிக்கு அசனவிருந்து நடந்தது. ஏற்பாடுகளை சிப்பிகுளம் பங்குதந்தை சகாயம் மற்றும் பங்குஇறைமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: