தொண்டாமுத்தூரில் அரங்கநாதர் கோயில் கும்பாபிஷேகம்

தொண்டாமுத்தூர்: கோவை அருகே தொண்டாமுத்தூரில் பழமையான பஜனை மடம் எனும் அரங்கநாதர் கோயில் புதிதாக கட்டப்பட்டு, மூலஸ்தானம், இரு நிலை கோபுரம், தும்பிக்கை ஆழ்வார் சயன கோலத்தில் அரங்கநாதர், மகாலட்சுமி தாயார், ராமானுஜர், நம்மாழ்வார், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், யோக நரசிம்மர், குருவாயூரப்பன், ஹயக்கீரீவர் தன்வந்திரி தசாவாதாரம்  கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிசேக விழா கடந்த 3ம் தேதி துவங்கியது. நேற்று அதிகாலை 4 மணிக்கு நாலாயிரம் திவ்யபிரபந்தம், வேதாகாலம், தொடர்ந்து கலசங்கள் புறப்பாடு நடந்தது. 9 மணிக்கு, கோவிந்தா கோஷத்துடன் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. அப்பன்னாச்சாரியார் கும்பாபிசேகத்தை நடத்தி வைத்தார். அபிசேக சாற்றுமுறை, தசாதானம், தசதரிசனம், அன்னதானம் நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: