வெள்ளரிவெள்ளியில் காளியம்மன் கோயில் விழா

இடைப்பாடி: இடைப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி ஊராட்சியில், கொல்லப்பட்டி முனியப்பன் கோயிலில் தாலி காத்த காளியம்மன் கோயில் திருவிழா, கடந்த வாரம் வியாழக்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று மாலை முனியப்ப சுவாமி, காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அலைமோதியதையொட்டி, பூலாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: