வாழப்பாடி அருகே பொன் மாரியம்மன் கோயில் தேர்திருவிழா

வாழப்பாடி: வாழப்பாடி அருகே, பொன்மாரியம்மன் கோயிலில் தேர்திருவிழா நடந்தது. வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி ஊராட்சியில், பொன்மாரியம்மன் கோயில் தேர் திருவிழா நேற்று நடந்தது. நேற்று மாலை 3 மணியளவில், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர். விழாவையொட்டி, கேரள செண்டை மேளம், ஓம்சக்தி கோலாட்ட குழுவினரின் கோலாட்ட நிகழ்ச்சி, சுவாமி வேடமணிந்த பக்தர்கள் ரத ஊர்வலமாக வந்தனர். நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் தேர் நிலை பெயர்த்தனர். நேற்று மாலை 2 மணியளவில் அலகு குத்தல், அக்னி கரகம், பூங்கரகம், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: