ராமியண அள்ளியில் விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

கடத்தூர்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே ராமியண அள்ளியில் விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ராமியணஅள்ளி ஸ்ரீவிநாயகர், மாரியம்மன், ஸ்ரீஞானாம்பிகை, ஸ்ரீகாளஹஸ்திஸ்வர், சுப்பிரமணியர், நவநாயகர்களுக்கான கும்பாபிஷேக விழா, கடந்த 29ம் தேதி நடந்தது. விழாவையொட்டி பக்தர்கள் பால் குடம், புனித நீரை எடுத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதையடுத்து கோயில் கோபுரத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து 30ம் தேதி முதல், தினமும் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும் 10ம் தேதி மண்டல பூஜை விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆர்எம் ராஜா தலைமை வகித்தார். கர்ணாமூர்த்தி, பாண்டியன், ஸ்ரீகருடா புளூ மெட்டல் குமரேசன், கார்மெண்ட்ஸ் மாறன், டிராவல்ஸ் மாறன், ராமியணஅள்ளி திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: