புதுப்பிக்கப்பட்ட தெப்பக்குளத்திற்கு கும்பாபிஷேகம்

ஈரோடு: ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்தூரி அரங்கநாதர், மகிமாலீஸ்வரர் ஆகிய  கோவில்களுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளம் 150  ஆண்டுகளாக இருந்து வந்தது. ஆனால் நாளடைவில் தெப்பக்குளத்தை முறையாக  பராமரிக்காமல் புதர்மண்டி காட்சியளித்தது. இதனை தொடர்ந்து தனியார்  அமைப்புகளை கொண்டு குளத்தை புதுப்பிக்க கலெக்டர் பிரபாகர் நடவடிக்கை  மேற்கொண்டார். அதனடிப்படையில் 14 ஆயிரத்து 900சதுரஅடியில் இருந்து  தெப்பக்குளத்தை சீரமைக்க பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலமாக 49  லட்ச ரூபாய் நிதி பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில் தெப்பக்குளத்தின் கும்பாபிசேக விழா நேற்று நடந்தது. முன்னதாக 4ம்தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிசேக விழா தொடங்கியது. இந்த கும்பாபிசேக நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. தென்னரசு,  ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் சின்னசாமி, பொதுச்செயலாளர் கணேசன்,  பொருளாளர் ஞானவேல், அறங்காவலர்கள் சிவகுமார், சுந்தரம், துளசி பில்டர்ஸ்  சத்தியமூர்த்தி, ஈரோடை அமைப்பின் தலைவர் டாக்டர் சுதாகர் உட்பட பலர் கலந்து  கொண்டனர். கும்பாபிசேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது.

Related Stories: