ஆண்டவருக்கு அஞ்சுவதே மாட்சி

என் மனத்திற்குப் பிடித்தவை மூன்று. அவை, ஆண்டவர் முன்னும் மனிதர் முன்னும் அழகுள்ளவை. உடன்பிறப்புகளிடையே காணப்படும் ஒற்றுமை, அடுத்திருப்பாரோடு ஏற்படும் நட்பு; தங்களுக்குள் ஒன்றி வாழும் கணவன்மனைவியர்; மூன்று வகை மனிதரை நான் வெறுக்கிறேன்; அவர்களின் வாழ்வை நான் பெரிதும் அருவருக்கிறேன். அவர்கள், இறுமாப்பு கொண்ட ஏழைகள்; பொய் சொல்லும் செல்வர்; கூடா ஒழுக்கத்தில் ஈடுபடும் அறிவற்ற முதியவர். உன் இளமையில் நீ எதையும் சேமித்து வைக்காவிடில் முதுமையில் எதைக்காண்பாய்? தீர்ப்பு வழங்குவது நரை திரை விழுந்தோருக்கு ஏற்றது. அறிவுரை கூறுவது பெரியவர்களுக்குத்தக்கது. முதியோருக்கு ஞானமும், மாண்புடையோருக்கு சிந்தனையும், அறிவுரையும் எத்துணைச் சிறந்தவை. பரந்த பட்டறிவே முதியோரக்கு மணிமுடி. ஆண்டவருக்கு அஞ்சுவதே அவர்களுக்கு மாட்சி!

Advertising
Advertising

பேறு பெற்றோர் என நான் கருதுவோர் ஒன்பது வகைப்படுவர். பத்தாம் வகையினரைப் பற்றியும் என் நாவால் எடுத்துரைப்பேன். அவர்கள் தங்கள் பிள்ளைகளில் மகிழ்ச்சியுறும் பெற்றோர்; தங்கள் பகைவரின் வீழ்ச்சியைக் காண வாழ்வோர்; அறிவுக்கூர்மை கொண்ட மனைவியருடன் வாழும் கணவர்கள்; நாவால் தவறாதோர்; தங்களைவிடத் தாழ்ந்தோருக்குப் பணிவிடை செய்யாதோர்; அறிவுத்திறனைக் கண்டடைந்தோர்; செவி சாய்ப்போரிடம் பேசுவோர்; ஞானத்தைக் கண்டுகொண்டோர் எத்துணை மேலானவர்கள்! ஆயினும் ஆண்டவருக்கு அஞ்சுவோரைவிடச் சிறந்தவர்கள் எவருமில்லை. ஆண்டவருக்கு அஞ்சுதல்  எல்லாவற்றையும்விட மேலானது. அதனைப் பெற்றவருக்கு ஈடு இணை ஏது? ஆண்டவருக்கு அஞ்சுதலே அவரை அன்பு செய்வதன் தொடக்கம். பற்றுறுதியே அவரைப் பற்றிக் கொள்வதன் தொடக்கம்.

வருத்தங்களிலெல்லாம் கொடியது மனவருத்தமே; தீமைகளிலெல்லாம் கொடியது பெண்ணிடமிருந்து வரும் தீமையே; துன்பங்களிலெல்லாம் கொடியது நம்மை வெறுப்பவரிடமிருந்து வரும் துன்பமே; பழிகளிலெல்லாம் கொடியது நம் பகைவரிடமிருந்து வரும் பழியே; தலைகளிலெல்லாம் கொடியது பாம்பின் தலையே. சீற்றத்திலெல்லாம் கொடியது பகைவரின் சீற்றமே. கெட்ட மனைவியுடன் வாழ்வதைவிட சிங்கத்துடனும், அரக்கப் பாம்புடனும் வாழ்வது மேல். மணல் மேட்டில் முதியவரால் ஏற முடியாது, வாயாடி மனைவியுடன் அமைதியான கணவர் வாழ முடியாது. மங்கையரின் அழகினில் மயங்கி விடாதே; பெண்கள் மீது இச்சை கொள்ளாதே.’’  (சீராக் 25:116; 2023)

‘‘இறைவனைக் கைவிட்டு அவதியுறும் காலத்திலும் மனம் மாறி அவரிடம் திரும்பி வந்தால் அவர்தம் மக்களைத் தவறாது பாதுகாத்து அவர்களுக்கு விடுதலை அளிப்பார்.’’இரண்டு ஆத்மாக்கள் ஐக்கியமாகி, ஓர் ஆத்மா தாக்கப்படும்போது இன்னொரு ஆத்மாவும் இயற்கையாகத் துடிக்குமானால் அந்த உறவே புனித உறவு. பிறப்பில் சொந்தமிருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி எங்கே பந்தம் ஏற்றத்தாழ்வுகளில் சேர்ந்து வருகிறதோ அங்கேதான் உறவிருக்கிறது. கண்ணீரைத் துடைக்கின்ற கைகள்,  காயப்பத்துக்கும் கட்டுப் போடும் கைகள், வறுமையில் பங்கு கொள்ளும் உள்ளம். சோதனையில் கூடவே வரும் நட்பு, இவைகளால் உறவு பூர்த்தியாகி வருகிறது. இடர் வந்த காலத்தில்தான் சிநேகிதர். பந்துக்கள், முதலியவர்களுடைய அன்பை திடமாக அளந்தறியலாம். நமக்கு வரும் இடர்தான் சிநேகிதர்களையும், உறவின் முறைகளையும் அளக்கும் அளவு கோல்.

‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: