கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இஸ்கான் கோயிலில் சிறப்பு வழிபாடு

நெல்லை: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ணர் மற்றும் பலராமருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை வண்ணார்பேட்டையில் இஸ்கான் கோயிலில் கடந்த 2ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பகவான் கிருஷ்ணர், பலராமர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, ஹரிநாம சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

மறுநாள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் பகவான் கிருஷ்ணர், பலராமர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை, ஹரிநாம சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இஸ்கான் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: