8 வைணவ கோயில்களில் உறியடி திருவிழா : பக்தர்கள் திரண்டனர்

கும்பகோணம்: கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள 8 வைணவ கோயில்களில் உறியடி திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. கிருஷ்ண அவதாரத்தின்போது கிருஷ்ணர் வீட்டில் உறியில் சேகரித்து வைக்கபட்டிருந்த நவநீதம் என்றழைக்கப்படும் வெண்ணையை உடைக்கும் நாளை உறியடி நாளாக ஒவ்வொரு வைணவ கோயில்களிலும் கொண்டாடுவது வழக்கம். இதனையொட்டி கும்பகோணம் ராமசுவாமி, சக்கரபாணி, சாரங்கபாணி, ஆதிவராகர், ராஜகோபாலர், நவநீதகிருஷ்ணன், மேலகாவிரி வரதராஜபெருமாள், வேதநாராயணபெருமாள் ஆகிய 8 கோயில்களில் உறியடி உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ராமபிரான் உற்சவமூர்த்தியாக தங்க படிச்சட்டத்தில் வந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

அப்பொழுது இடையர் குளத்தோர் உற்சாகமாக வந்து உறியை அடித்து மகிழ்ந்தனர். பின்னர் சுவாமி திருவீதியுலா நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: