திருச்செந்தூர் ஆவணித் திருவிழா, தங்கச்சப்பரத்தில் சண்முகர் வீதியுலா : திரளானோர் தரிசனம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற ஆவணித் திருவிழா கடந்த மாதம் 30ம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி,  அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது. 7ம் நாளான நேற்று  அதிகாலை 5.20 மணிக்கு சுவாமி சண்முகருக்கு உருகு சட்டசேவை நடந்தது. காலை 9.45  மணிக்கு சுவாமி வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை  மண்டகப்படியை சேர்ந்ததும் மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,  அலங்கார தீபாராதனை நடந்தது.

மாலை 4.30 மணிக்கு தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் சண்முகர் எழுந்தருளியதும் எட்டு வீதிகளில் உலா நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர். 8ம் திருநாளான இன்று அதிகாலை சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி  எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேலக்கோயிலை சேர்தலும், தொடர்ந்து அங்கு சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம் தீபாராதனை நடைபெறும். காலை 10.30 மணிக்கு பச்சை  சாத்தி சண்முகர் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து இரவில்  கோயிலை வந்தடைகிறார். விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் நாளை மறுதினம் (8ம் தேதி) நடக்கிறது.

Related Stories: