நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நோட்டீஸ்: 7 ஆண்டுகள் பழமையான வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை..!

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஜவஹர்லால் நேரு காலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆரம்பிக்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் நடத்தி வந்தது. இந்த பத்திரிகை பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தின் அசையா சொத்துக்களை சோனியாவும், ராகுலும் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதன் வாயிலாக கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை சோனியாவும், ராகுலும் சட்டவிரோதமாக அபகரித்துக்கொண்டதாக பாஜ தலைவர் சுப்பிரமணிய சாமி டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவரும் மக்களவை தலைவருமான ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறையினர் சம்மன் வழங்கியுள்ளனர். வழக்கு தொடர்பாக நாளை விசாரணைக்கு ஆஜராக ராகுல் காந்திக்கு ஆஜராகும் படியும், ஜூன் 8-ல் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதனிடையே இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அபிஷேக் சிங்வி; 7 வருட பழைய வழக்கில் அமலாக்கத்துறை இப்போது விசாரணை நடத்துவது ஏன்?. எந்தவிதமான சட்டவிரோத பணப் பரிவர்த்தனையும் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் நடக்கவில்லை எனவும் கூறினார். …

The post நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நோட்டீஸ்: 7 ஆண்டுகள் பழமையான வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை..! appeared first on Dinakaran.

Related Stories: