தேங்காய்ப்பால் அப்பள சாதம்

என்னென்ன தேவை?

பச்சரிசி - 1 கப்,
அப்பளம் அல்லது மசாலா அப்பளம் - 4,
திக்கான தேங்காய்ப்பால் - 1/2 கப்,
உப்பு - தேவைக்கு.

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
உடைத்த முந்திரி - 10,
பொடித்த காய்ந்தமிளகாய் - 4,
கீறிய பச்சைமிளகாய் - தேவைக்கு,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அரிசியை சுத்தம் செய்து கழுவி, உப்பு சேர்த்து உதிர் உதிராக சாதமாக வடித்துக் கொள்ளவும். சூடாக இருக்கும்போதே அதில் தேங்காய்ப்பால் ஊற்றி கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிக்க கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக பொன்னிறமாக தாளித்து சாதத்தில் கொட்டி கலந்து பரிமாறும்போது அப்பளத்தை பொடித்து சேர்த்து மெதுவாக கிளறி பரிமாறவும்.

குறிப்பு:

பரிமாறும் போதுதான் அப்பளத்தை உடைத்து சாதத்தில் கலக்க வேண்டும்.

Related Stories: