மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பவித்திர உற்சவ வைபவம்

மன்னார்குடி: மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலமான ராஜகோபால சுவாமி கோயிலில் பவித்திர உற்சவம்  நடைபெற்று வருகிறது.

கோயில்களின் பூஜைகளில் நிகழும் தவறுகளை நிவர்த்தி செய்ய பவித்ரோட்சவம் நடத்தப் படுவது வழக்கம். இந்த உற்சவம் ராஜகோபாலசாமி கோயிலில் நடைபெற்று வருகிறது. வருடம் முழுவதும் செய்யப்படும் அனைத்து பூஜைகளும் 10 தினங்களில் செய்யப்பட்டு வருகிறது. யாக சாலையில் புனித நீர் கடங்களில் வைக்கப்பட்டு பூஜை செய்து மூலவர் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலையில் ராஜகோபாலசுவாமி பவித்ர மாலை அணிந்து கோயிலை தினம்தோறும் வலம் வருகிறார். கடந்த 22ம் தேதி துவங்கிய இந்த உற்சவம் வரும் 31ம் தேதி தீர்த்தவாரியுடன் நிறைவடைகிறது. இதில் தினம்தோறும்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

Related Stories: