அன்னவாசல் அருகே எலிசபெத்தம்மாள் ஆலய தேர் பவனி

புதுக்கோட்டை: அன்னவாசல் புனித ஹங்கேரி எலிசபெத்தம்மாள் ஆலய தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.  அன்னவாசலில் புனித ஹங்கேரிநகர் எலிசபெத்தம்மாள் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் தேர் பவனி கடந்த வெள்ளிக்கிழமைஇரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து  பங்குதந்தைகள் ஜேம்ஸ்செல்வநாதன் தலைமையில் திருப்பலி நடந்தது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நவநாள் திருப்பலியும் சிறப்புமறையும் நடந்தது. இதில் அன்னவாசல், வயலோகம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான திருப்பலியினை பங்குதந்தைகள் இன்னாசிமுத்து மற்றும் தாஸ் ஆகியோர் செய்தனர். பின்னர் புனித ஹங்கேரி நகர் எலிசபெத்தம்மாள் தேர்பவனி வாணவேடிக்கையுடன் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.அதனை தொடர்ந்து திருவிழா திருப்பலியும், மலர் அலங்காரதேர் பவனியும் நடைபெற்று திருவிழா முடிவடைந்தது. இதில் அன்னவாசல் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான கிறிஸ்துவ பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கத்தோலிக்க கிறிஸ்தவ பொதுமக்கள் மற்றும் இளைஞர் மன்றத்தினர் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.

Related Stories: