பொய்யை என்னை விட்டு அகலச் செய்யும்

‘‘கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும். இதோ! காலம் நெருங்கி வந்துவிட்டது. இதற்கிடையில் தீங்கு புரிவோர் தீங்கு புரிந்துகொண்டே இருக்கட்டும். இழுக்கானவற்றைச் செய்வோர் இழுக்கானவற்றைச் செய்துகொண்டே இருக்கட்டும். தூயோர் தூய்மையானவற்றைச் செய்துகொண்டே இருக்கட்டும். இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கேற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைமாறு என்னிடம் உள்ளது. முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே!’’‘‘வானத்திற்கு ஏறிச்சென்று மீண்டவர் யார்? தம் கைப்பிடிக்குள் காற்றை ஒருங்கே கொணர்ந்தவர் யார்? கடல்களை மேலாடையில் அடக்கி வைத்தவர் யார்? மண்ணுலகின் எல்லைகளைக் குறித்தவர் யார்? அவர் பெயரென்ன? அவருடைய மகன் பெயர் என்ன?

Advertising
Advertising

நீதான் எல்லாவற்றையும் அறிந்தவனாயிற்றே? கடவுளின் ஒவ்வொரு வாக்கும் பரிசோதிக்கப்பட்டு நம்பத்தக்கதாய் விளங்குகிறது. தம்மை அடைக்கலமாகக் கொண்டவர்களுக்கு அவர் கேடயமாய் இருக்கிறார். அவருடைய வார்த்தைகளோடு ஒன்றையும் கூட்டாதே. கூட்டினால் நீ பொய்யனாவாய்; அவர் உன்னைக் கடிந்துகொள்வார். வரம் இரண்டு உம்மிடம் கேட்கிறேன். மறுக்காதீர். நான் சாவதற்குள் அவற்றை எனக்கு அளித்தருளும். வஞ்சனையும், பொய்யும் என்னை விட்டு அகலச் செய்யும். எனக்கு செல்வம் வேண்டாம்; வறுமையும் வேண்டாம். எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும். எனக்கு எல்லாம் இருந்தால் நான், ‘‘உம்மை எனக்குத் தெரியாது’’ என்று மறுதலித்து, ஆண்டவரைக் கண்டது யார்? என்று கேட்க நேரிடும். நான் வறுமையுற்றால் திருடனாகி என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும்.

வேலைக்காரனைப் பற்றி அவர் தலைவரிடம் போய் கோள் சொல்லாதே. சொன்னால் அவர் உன்மீது பழி சுமத்துவார். நீயே குற்றவாளியாவாய். தந்தையை சபிக்கிற, தாயை  வாழ்த்தாத மக்களும் உண்டு. மாசு நிறைந்தவராயிருந்தும் தம்மைத் தூயோர் எனக்கருதும் மக்களும் உண்டு. கண்களில் இறுமாப்பு, பார்வையில் ஆணவம், இத்தகைய மக்களும் உண்டு. பற்கள் கூரிய வாள், கீழ்வாய்ப் பற்கள் தீட்டிய கத்தி, இவற்றை உடைய மக்களும் உண்டு. அவர்கள் நாட்டிலுள்ள ஏழை மக்களை விழுங்கி விடுவார்கள். உலகிலுள்ள எளியோரைத் தின்று விடுவார்கள். அட்டைப்பூச்சிக்கு ‘‘தாதா’’ எனக்கத்தும் இரு புதல்வியர் உண்டு. ஆவல் தணியாத மூன்று உண்டு. ‘போதும்’ என்று சொல்லாத நான்காவது ஒன்றும் உண்டு.

அவை பாதாளம், மலடியின் கருப்பை, நீரை அலாவும் வறண்ட நிலம், ‘போதும்’ என்று சொல்லாத நெருப்பு ஆகியவையே. தகப்பனை ஏளனம் செய்யும் கண்களையும், வயது முதிர்ந்த தாயை இகழும் விழிகளையும் இரு காட்டுக்காக்கைகள் பிடுங்கட்டும். கழுகுக் குஞ்சுகள் தின்னட்டும். எனக்கு வியப்பினைத் தருவன ஒன்று உண்டு. என் அறிவுக்கு  எட்டாத நான்காவது ஒன்றும் உண்டு. அவை வானத்தில் கழுகு மிதத்தல், கற்பாறை மேல் பாம்பு ஏறுதல், நடுக்கடலில் கப்பல் மிதந்து செல்லுதல், ஆண் மகனுக்கு பெண் மீதுள்ள நாட்டம் ஆகியவையே.’’  (நீதிமொழிகள் 30:419) ஒவ்வொருவரும் தம் தீவினைகளுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். அவர்களின் எண்ணமும், நெஞ்சமும் உள்ளார்ந்த புதுப்பொலிவு பெற வேண்டும். ஆணவம் கொண்டு மற்ற மக்களைக் கொடுமைப்படுத்தும் எவரையும் ஆண்டவர் தண்டிக்காமல் விடமாட்டார்.

‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ.

Related Stories: