இந்த வாரம் என்ன விசேஷம்?

ஆகஸ்ட் 18, சனி   

Advertising
Advertising

திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு ஆராதனை. திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு,

ஆகஸ்ட் 19, ஞாயிறு  

குலச்சிறையார். மதுரை சோமசுந்தரர் உலவாய்க் கோட்டை அருளிய திருவிளையாடல். திருவல்லிக்கேணி குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருவேற்காடு கருமாரியம்மன் இரவு 8 மணிக்கு மஹிஷாசுரமர்த்தனி திருக்கோலத்தில் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா.

ஆகஸ்ட் 20, திஙகள்
 

திருமலை திருப்பதி பவித்ர உற்சவராம்பம். மதுரை சோமசுந்தரர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை. ரிஷாபாரூட தரிசனம். விருதுநகர் சுவாமி அம்பாள் ரிஷபசேவை. அஹோபிலமடம் ஸ்ரீமத் 2வது பட்டம் ஸ்ரீஅழகியசிங்கர் திருநட்சத்திரம்.

ஆகஸ்ட் 21, செவ்வாய்   

குங்கிலியக் கலயனார். மதுரை ஆவணி மூலம் பிட்டு உற்சவம். அக்கரைவட்டம் ஸ்ரீசித்தானந்த ஸ்வாமிகள் குருபூஜை. வேளூர் ஸ்ரீபஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, திருவையாறு சூரிய புஷ்கரணியில் தீர்த்தம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயில் ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுரை சோமசுந்தரர் வளையல் விற்ற காட்சி. இரவு ஸ்வாமி பட்டாபிஷேகம். ஸ்வாமி, அம்பாள் இருவரும் தங்கப்பல்லக்கில் பவனி. திருவேற்காடு கருமாரியம்மனுக்கு காலை 5 மணிக்கு 108 சங்காபிஷேகம். தங்க கவசம்.

ஆகஸ்ட் 22, புதன்  

ஸர்வ ஏகாதசி. மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் புறப்பாடு.வாஸ்து நாள்.(ந.நே.மா.3.10  3.54) ஸ்ரீரங்கம் பவித்ர உற்சவ ஆரம்பம், பக்ரீத் பண்டிகை.

ஆகஸ்ட் 23, வியாழன்  

திரயோதசி. மகாபிரதோஷம். திருமலை திருப்பதி பவித்ர உற்சவ முடிவு, திருப்பதி திருவேங்கட முடையான் கத்வால் சம்ஸ்தான மண்டபத்திற்கு எழுந்தருளல். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

ஆகஸ்ட் 24, வெள்ளி  

சதுர்த்தசி.. நடராஜர் அபிஷேகம்.)மாலை). ஓணம் பண்டிகை. திருவோண விரதம். வரலட்சுமி விரதம். சித்தர்காடு ஸ்ரீ சிற்றம்பல விநாயகர் சம்வத்ஸராபிஷேகம். சங்கரன் கோயில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் வேதவல்லித்தாருக்கு திருமஞசன சேவை, திருவேற்காடு கருமாரியம்மனுக்கு காலை 5 மணிக்கு அபிஷேகம். அனுமனுக்கு வடை  மாலை.

Related Stories: