உத்திர ரங்கநாதர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

பள்ளிகொண்டா: பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. காலை விஸ்வரூபம், மூலவர் ஏகாந்த திருமஞ்சனம், பூவங்கி சேவையும், பிற்பகல் உற்சவர் அலங்கார திருமஞ்சனமும் நடைபெற்றது. மாலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மழையிலும் பக்தர்கள் கூட்டம் களையாமல் நின்றபடி சுவாமியின் திருகல்யாண உற்சவத்தை பார்வையிட்டனர். ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும், உத்திர ரங்கநாதர் கோயில் உற்சவ சேவை சங்கத்தினரும் செய்தனர். காலை, மதியம், இரவு என 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: