புளி அவல் உப்புமா

தேவையான பொருட்கள்.

Advertising
Advertising

கெட்டி அவல்   -   கால் கிலோ

புளி  -    ஒரு சிறிய  எலுமிச்சையளவு

நல்லெண்ண்ணெய்   -   இரண்டு டேபிள் ஸ்பூன்

பெருங்காயம்   -   அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை   -   இரண்டு கொத்து

கடுகு, உளுத்தம் பருப்பு   -   ஒரு டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு   -   ஒரு டேபிள் ஸ்பூன்

மஞ்சள் பொடி   -   அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்  -    நான்கு

உப்பு   -   ஒரு டீஸ்பூன்

வேர்க்கடலை   -   2 ஸ்பூன்.

செய்முறை:

மூன்றரை டம்ப்ள்ர் தண்ணீரில் புளியை கெட்டியாகக் கரைத்து அதில் அவலை சுத்தம் செய்து ஊற வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பெருங்காயம் போடவும். ஒரு நிமிடம் கழித்து மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி கறிவேப்பிலையை உருவிப் போட்டு மஞ்சள் பொடி சேர்க்கவும். புளிக்கரைசலில் ஊறிய அவலை உப்பு சேர்த்து கடாயில் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். மெதுவாகப் பிரட்டிக் கொடுத்து அவல் நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும் இறக்கவும். வேர்க்கடலையை வறுத்து சேர்த்து நன்கு கிளறி நிவேதிக்கவும்.

Related Stories: