அக்காரவடிசல்

என்னென்ன தேவை?

Advertising
Advertising

பச்சரிசி   -   1 கப்,

பாசிப்பருப்பு   -   1/2 கப்,

பால்  -    6 கப்,

தண்ணீர்    -  தேவையான அளவு,

வெல்லம்  -    1½ கப்,

நெய்   -   3/4 கப்,

பொடித்த ஏலக்காய்  -    2,

முந்திரி, காய்ந்ததிராட்சை   -  தலா 10,

குங்குமப்பூ   -   சிறிது.

எப்படிச் செய்வது?

கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும். குங்குமப்பூவை 1 டேபிள்ஸ்பூன் பாலில் ஊற வைக்கவும். சுத்தமான வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான பாகாக காய்ச்சி கொள்ளவும். மிதமான தீயில் குக்கரை வைத்து பச்சரிசி, பாசிப்பருப்பை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும். பின்பு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இத்துடன் 4 கப் பால் சேர்த்து கொதி வந்ததும் மூடி போட்டு 3 விசில் விட்டு இறக்கவும். விசில் அடங்கியதும் மூடியை திறந்து மீதி பாலைச் சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து வெல்லப்பாகை சேர்த்து சிறிது நெய் ஊற்றி 2 நிமிடம் கிளறி குங்குமப்பூ பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து இறக்கவும். பின்பு மீதியுள்ள நெய், வறுத்த முந்திரி, திராட்சையால் அலங்கரித்து நிவேதிக்கவும்.

Related Stories: