நெல்லை டவுன் மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்

நெல்லை: நெல்லை டவுன் சங்கரநாராயணன் தெருவில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளைகாப்பு, ஊஞ்சல் உற்சவம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை டவுன் சங்கரநாராயணன் தெருவில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் நேற்று காலை ஆடிப்பூர விழா நடந்தது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து மாலையில் பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. முளைப்பாரி ஊர்வலமானது நெல்லையப்பர் கோயில் ரதவீதிகளை வலம்வந்து இறுதியில் கோயில் வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், ஊஞ்சல் உற்சவம், மடிநிரப்பும் பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆடிபூர வளைகாப்பு மகளிர் குழு நிர்வாக கமிட்டியார் செய்திருந்தனர்.

Related Stories: