×

அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு : திரளான பக்தர்கள் வழிபாடு

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அடுத்த வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் ஆடிமாத அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். சேத்துப்பட்டு அடுத்த வடவெட்டி கிராமத்தில் அங்காளம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடிமாத அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை கோபால வினாயகர், பெரியாழி, அங்காளம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர், மாலை சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தார். இரவு ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும், முடிகாணிக்கை செலுத்தியும், ஆடு, கோழி பலியிட்டும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?