அகரம் செல்லியம்மன் கோயில் விழாவில் மாவிளக்கு ஊர்வலம்

போச்சம்பள்ளி:   போச்சம்பள்ளி அருகே அகரம் கிராம மக்களின் குலதெய்வமாக விளங்கும் பிரசித்தி பெற்ற 162 ஆண்டு பழமைவாய்ந்த செல்லியம்மன் கோயில் விழா நடைபெற்றது. முதல்நாள் காலை கங்கை பூஜை செய்யப்பட்டது. பின்னர், பெண்கள் பொங்கல் வைத்தனர். மேலும், கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். 2ம் நாள் காலை செல்லியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். அப்போது, மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் வானவேடிக்கையுடன் கரகாட்டம் நடைபெற்றது. அம்மன் வீதி உலாவின்போது குளிர்ந்த நீரை ஊற்றி மஞ்சள், குங்குமமிட்டு வணங்கினர். பின்னர், ஆடு மற்றும் கோழி பலியிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கறி விருந்து படைத்தனர்.

Related Stories: