நாகம்மன் கோயில் செடல் விழா

கடலூர்: கடலூர் திருப்பாதிரிபுலியூர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள நாகம்மன் கோயிலில் செடல் உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் அருள்பலித்தார். விழாக்காலத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு நேரத்தில் சாமி வீதியுலா நடக்கிறது. செடல் திருவிழா வருகிற 17ம் தேதி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி வேல்விழி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Stories: