அம்பை கோயிலில் தெப்ப உற்சவ திருவிழா

அம்பை: அம்பை அருகே சின்ன சங்கரன்கோயில் ஆடி தபசு திருவிழாவை முன்னிட்டு 2 நாள் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அம்பை தமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள சின்ன சங்கரன்கோயில் கோமதி அம்பாள், சங்கரலிங்கசுவாமி ஆடித்தபசு திருவிழா ஜூலை 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தபசுக்காட்சி ஜூலை 27ம் தேதி நடந்தது. இதன் தொடர்ச்சியாக அம்பை லெட்சுமி நாராயணர் கோயில் அருகே அமைந்துள்ள தெப்பத்தில் ஜூலை 28ம் தேதி இரவு சங்கரநாராயணர் சுவாமி, சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்பாள் எழுந்தருளிய தெப்ப உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு அகஸ்தீஸ்வரர் சுவாமியும், உலோபாமுத்திரை அம்பாளும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி வேதபாராயணங்கள் முழங்க 11 முறை வலம் வந்தனர். இரவில் அம்பாள், சுவாமி திருவீதி உலா நடந்தது.

Advertising
Advertising

Related Stories: