கணியம்பாடி அடுத்த நாகநதியில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

அணைக்கட்டு: கணியம்பாடி அடுத்த நாகநதி கிராமத்தில் நடந்த துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.  கணியம்பாடி அடுத்த நாகநதி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த 12ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பிற்பகலில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் இரவில் நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வில் வளைப்பு, பகடை துயில், அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் தூது, அரவான் களபலி, கர்ண மோட்சம் மற்றும் 18ம் போர் உள்ளிட்ட நாடகங்கள் நடந்தது. நிறைவு நாளான நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 10 மணியளவில் துரியேதனன் படுகளமும் மாலை 3 மணியளவில் தீமிதி விழாவும் நடந்தது. இதில் நாகநதி, சோழவரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திறளான பக்தர்கள் கலந்து கொண்டு கொண்டனர். மாலையில் தீமிதி திருவிழா நடந்தது. இன்று காலை தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது.

Advertising
Advertising

Related Stories: