ஆலங்குடி அருகே செல்லியம்மன் கோயிலில் மது எடுப்பு திருவிழா

ஆலங்குடி: ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடி செல்லியம்மன் கோயில் ஆடி திருவிழாவையொட்டி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு நேற்று மது எடுப்பு திருவிழா நடந்தது. மது எடுப்பு திருவிழா மழைவேண்டி நடத்தப்படும் திருவிழாவாகும். குப்பகுடி, மேலக்கோட்டை, பாத்தம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் குடத்தில் நவதானியங்களை கொட்டி குடத்தின் மீது பலவண்ண மலர்களால் அலங்கரித்து மது எடுத்து வந்த பெண்கள் கோயில் வாசலில் ஒன்றிணைந்து அம்மன் பாடல்களை பாடுவார்கள்.

இதனை தொடர்ந்து பெண்கள் தலையில் மதுவை சுமந்து சென்று செல்லியம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். மேலும், தங்கள் நிலத்தில் விளைந்த நெல்மணிகளை கொண்டு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். இவ்வாறு செய்தால் மழை பெய்யும், விவசாயம் செழிக்கும், அம்மை போன்ற நோய்கள் தாக்காது என்பதற்காகவே இந்த மது எடுப்பு திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து வானவேடிக்கை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: