×

தங்கல் படத்தில் ஆமிர்கான் மகளாக நடித்த நடிகை சுஹானி திடீர் மரணம்

மும்பை: நடிகை சுஹானி திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 19. அமீர்கான் நடித்த படத்தில் ஜூனியர் பபிதா போகத் கதாபாத்திரத்தில் சுஹானி பட்நாகர் நடித்துள்ளார். இதில் ஆமிர்கானின் இளைய மகளாக சிறு வயது கேரக்டரில் சுஹானி நடித்திருக்கிறார். சுஹானி சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கினார். இதில் அவரது கால் எலும்பு முறிந்தது. இதையடுத்து சிகிச்சைக்கு பிறகு அவர் பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகளால், பக்கவிளைவுகளை சந்தித்துள்ளார். இதையடுத்து சுஹானி சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்தான் அவர் உயிரிழந்துள்ளார். மருந்து ஒவ்வாமையால் அவர் உயிரிழந்ததாகவும் வேறு காரணத்தால் அவரது மரணம் ஏற்பட்டதாகவும் இரு வேறு கருத்துகள் பாலிவுட்டில் உலா வருகின்றன.

The post தங்கல் படத்தில் ஆமிர்கான் மகளாக நடித்த நடிகை சுஹானி திடீர் மரணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Suhani ,Aamir Khan ,Mumbai ,Suhani Bhatnagar ,Babita Phogat ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...