×

யோகாசனம் ஆத்மார்த்த பூஜை அலங்காரத்தில் அம்பாள் வீதியுலா

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் ஆடித்தபசு 6ம் நாள் திருவிழாவில் கோமதி அம்பாள் யோகாசனம் ஆத்மார்த்த பூஜை அலங்கார வீதியுலா நடந்தது. சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 17ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காைல, இரவில் கோமதிஅம்பாள் வெவ்வேறு அலங்காரங்களில், வாகனங்களில் வீதியுலா நடைபெறும்.

6ம் திருவிழாவான நேற்று காலை 9 மணிக்கு கோமதிஅம்பாள் யோகாசனம் ஆத்மார்த்த பூஜை அலங்காரத்தில் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சுவாமி சன்னதியில் உள்ள 6ம் திருநாள் மண்டகப்படியில் கோமதி அம்பாள் எழுந்தருளினார். மண்டகப்படி தாரர்கள் சார்பில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடந்தது. இரவு கனகதண்டிகையில் எழுந்தருளி அம்பாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி