மேலூர் அருகே காப்பு கட்டுதலுடன் ஆடித்தபசு திருவிழா தொடங்கியது

மேலூர்: மேலூர் அருகே ஆடித் தபசுத் திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மேலூர் அருகேயுள்ள தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் உள்ளது கோமதி அம்பிகா சமேத சங்கரலிங்கம், சங்கர நாராயணர் சுவாமி கோயில். ஆடித்தபசுத் திருவிழாவிற்காக கோயில் முன் கொடியேற்றத்துடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அழகர்கோவிலில் தீர்த்தம் பெற்று, அம்பாளுக்கு பூஜைகள் நடத்தி, தீர்த்தக் குடங்களுடன் தும்பைப்பட்டி கோயிலுக்கு வந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 27ல் தும்பைப்பட்டியில் உள்ள சுவாமி வீட்டிலிருந்து பால்குடம், பன்னீர் குடம், சந்தனக்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்து சிவாலயபுரத்தில் உள்ள சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்ய உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ரமேஷ்  அய்யர், சங்கர நாராயணர் சுவாமி கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் சங்கரன் வகையறாப் பங்காளிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: