ஸ்ரீகாளஹஸ்தியில் பிரமோற்சவம் திரவுபதி சமேத தர்மராஜர் திருக்கல்யாணம் கோலாகலம்

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள திரவுபதி சமேத தர்மராஜ சுவாமி கோயில் பிரமோற்சவத்தையொட்டி நடந்த சுவாமி திருக்கல்யாணத்தில்திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். சித்தூர் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலின் துணை கோயிலான திரவுபதி சமேத தர்மராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பிரமோற்சவத்தின் 5வது நாளான நேற்றுமுன்தினம் திரவுபதி சமேத தர்மராஜர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.

Advertising
Advertising

முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் நடந்தது. பின்னர் வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க மேள, தாளத்துடன் திரவுபதி சமேத தர்மராஜருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் திருமண கோலத்தில் சுவாமி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், பிரமோற்சவத்தின் 6வது நாளான நேற்று சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி மேள, தாளம் முழங்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்தும் தேங்காய் உடைத்தும் சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: