இந்த வாரம் என்ன விசேஷம்?

ஜூலை 14, சனி  

சந்திர தரிசனம். ஆஷாட சுத்த பிரதமை. சாந்த்ரமான ஆஷாட மாஸ ஆரம்பம். ஆழ்வார்குறிச்சி சிவ சைலநாதர் வருஷாபிஷேகம். ரிஷப வாகனத்தில் ஸ்வாமியும் அம்பாளும் எழுந்தருளல். அமிர்த லக்ஷ்மி விரதம். திருமயம் சத்யமூர்த்தி பெருமாள் புறப்பாடு. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தெப்போற்சவம். இமயஜோதி சிவானந்தர் முக்திதினம்.

ஜூலை 15, ஞாயிறு  

கும்பகோணம் ராமர் வசந்த உற்சவ பூர்த்தி. கும்பகோணம் ஸ்ரீஆராவமுதன் தட்சிணாயன வாசல் திறப்பு. தட்சிணாயன புண்ணிய காலம். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் பவனி. ஸாவித்ரி விரத கல்பம். மதுரை மீனாட்சி முளைகொட்டு உற்சவம். சிம்ம வாகனத்தில் திருவீதியுலா.

ஜூலை 16, திங்கள்  

சதுர்த்தி விரதம். வேளூர் சீதளகும்பம் பூர்த்தி. மாணிக்கவாசகர் குரு பூஜை. ராமநாதபுரம் கோதண்ட ஸ்வாமி கருட சேவை. தேரழுந்தூர் ஞானசம்பந்தர், மெலட்டூர் விநாயகர் புறப்பாடு.

ஜூலை 17, செவ்வாய்  

ஆடிப்பண்டிகை. திருமலை திருப்பதி மரீசி மகரிஷி ஜெயந்தி. ஸ்கந்த பஞ்சமி விரதம். ஸமீகெளரி விரதம். கும்பகோணம் கும்பேஸ்வரர், மங்களாம்பிகை, பழநி பெரிய நாயகியம்மன் லட்சார்ச்சனை. நத்தம் மாரியம்மன் பூந்தேரில் பவனி, சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கச் சப்பரத்தில் பவனி, மதுரை மீனாட்சியம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி. தக்ஷிணாயன புண்ணிய காலம்.

ஜூலை 18, புதன்  

குமார சஷ்டி. சஷ்டி விரதம். மதுரை மீனாட்சியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் புறப்பாடு. சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதியுலா. ராமநாதபுரம் கோதண்டராமஸ்வாமி திருக்கல்யாண வைபவம்.

ஜூலை 19, வியாழன்  

திருமாலிருஞ்சோலை கள்ளழகர், மதுரை செளந்திரராஜப் பெருமாள் தலங்களில் உற்சவாரம்பம். சங்கரன்கோவில் கோமதியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா.

ஜூலை 20, வெள்ளி  

பெருமிழலைக்குறும்பர். வேளூர், சீர்காழி, திருக்கடவூர், திருப்பனந்தாள், திருவையாறு அம்பாளுக்கு சந்தனக் காப்பும் நவசக்தி அர்ச்சனையும். பின்னிரவு விடியல் திருநாவலூரில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஐக்கியம். இலந்தை முத்துமாரியம்மன் துவஜாரோகணம். திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கிருஷ்ணாவதார திருக்கோலம். ராமநாதபுரம் கோதண்டஸ்வாமி குதிரை வாகனத்தில் பவனி. வடமதுரை செளந்தரராஜப் பெருமாள் அன்னவாகனத்தில் திருவீதியுலா. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வேதவல்லித் தாயார் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

Related Stories: