அறந்தாங்கி அருகே கூகனூர் மழை முத்துமாரியம்மன் கோயிலில் காவடி எடுப்பு விழா

அறந்தாங்கி: அறந்தாங்கியை அடுத்த கூகனூர் மழைமுத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து அம்மனை வழிபட்டனர். அறந்தாங்கியை அடுத்த கூகனூர் மழை முத்துமாரியம்மன் கோயிலில் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான காவடி எடுப்பு விழா நேற்று நடைபெற்றது. பக்தர்கள் பால்காவடி, மலர் காவடி, செடல் காவடி, பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு மழை முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதணைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: