பலன் தரும் ஸ்லோகம் : (எல்லா செயல்களிலும் வெற்றி பெற...)

ஓம் நமோ கணபதயே நமஹ

கணபதிர் விக்னராஜோ லம்பதுண்டோ கஜானன:
Advertising
Advertising

த்வைமாதுரஸ்ச ஹேரம்ப ஏகதந்தோ கணாதிப:

விநாயகஸ்சாருகர்ண: பஸுபாலோ பவாத்மஜ:

பத்ம புராணத்தில் உள்ள விநாயகர் துதி

பொதுப் பொருள்:  

‘ஓம்’  எனும் மூலமந்திரத்திற்கு அதிபதியான கணபதியை வணங்குகிறேன். பூத  கணங்களுக்குத் தலைவனாக விளங்குபவரே, இடையூறுகளை இல்லாது செய்பவரே, அழகான  நீண்டதுதிக்கையை உடையவரே, யானையின் முகம் படைத்தவரே, கங்கா, கௌரி என இரண்டு  தாய்களைக் கொண்டவரே, பக்தர்களுக்குக் குறைவில்லாது அருள்புரிபவரே, ஒரு  தந்தத்தைக் கொண்டு அருள் புரிபவரே, அழகிய பெரிய காதுகளைக் கொண்டவரே, உலக  மக்களைக் காப்பவரே, பரமனின் புத்திரனே, உமக்கு நமஸ்காரம். எங்கள்  விக்கினங்களையெல்லாம் விலக்கி நிம்மதிப்பெருவாழ்வு வாழ, வழி நடத்துவீராக.

(விநாயகரைத் தொழ நேரம் காலம் என்று எதுவும் கிடையாது. எப்போதும் அவரை நினைத்து வணங்கலாம். நம் செயல்களில் ஏற்படும் இடையூறுகளை அகற்றி வெற்றிபெறச் செய்பவர் அவர். அறுகம்புல்லால் இத்துதியைக்கூறி அவரை அர்ச்சித்தால் எல்லா வளமும், காரிய வெற்றியும் பெறலாம்.)

Related Stories: